புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Omicron மாறுபாடு அச்சுறுத்திவரும் நிலையில், சுவிஸ் விமான நிலையத்தில் PCR சோதனை முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று தொடர்பாக தற்போது பொஸ்வானா நாட்டில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, கனடா மற்றும் ஆசிய நாடுகள் துரித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவும் பயணத்தடைகள் விதித்துள்ளன. தற்போது சுவிஸ் நிர்வாகமும் தென்னாபிரிக்காவில் இருந்து நேரடி விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும் பயணிகள் குறிப்பிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையிலேயே சுவிஸ் விமான நிலையங்களில் PCR சோதனை முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் தென்னாப்ரிக்காவில் இருந்து 2 விமானங்கள் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவை, விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.தற்போது விமான பயணிகள் அனைவருக்கும் PCR சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுவிஸ் சுகாதாரத்துறையால் விடுக்கப்பட்டுள்ளது.