ரஷ்யாவின் பொய்யான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என உக்ரைன் படைகள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் மாத்திரம் நூற்றுக்கணக்கான உக்ரைனிய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் தகவல் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு அதிரடித் தாக்குதல்கள் எதுவும் நடத்த வேண்டாம் என விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாகவும், உக்ரைனிய படைகளுக்கு சரணடைய வாய்ப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உக்ரைனிய வீரர்கள் விளாடிமிர் புடினின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையில், காணொளி ஒன்றின் ஊடாக பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.
மரியுபோல் நகரில் நாங்கள் எஞ்சியிருக்கும் வரையில், மரியுபோல் நகரம் கண்டிப்பாக உக்ரைன் வசமே இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.