அடிமுட்டாள்களை கொண்ட அணியே நாடாளுமன்றம் வந்துள்ளது – தயாசிறி

அடிமுட்டாள்களை கொண்ட அணியே நாடாளுமன்றம் வந்துள்ளது – தயாசிறி

தனது 17 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் பார்த்த மிக மோசமான நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறிவார்ந்த அரசாங்கத்தை எதிர்பார்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கிய போதிலும் மாடுகள், அடிமுட்டாள்களை கொண்ட அணி நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்து ஆட்சி வரும் தரப்பினர் பொருட்களின் விலைகளை குறைக்க போகிறோம் என்றால் அது முடியுமா?

டொலர் கையிருப்பில் இல்லை. நாம் டொலர்களை செலவு செய்து பொருட்களை இறக்குமதி செய்கிறோம். தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகள் இல்லை. நாம் அனைவரும் இணைந்து இதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

மக்கள் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளை செய்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய நாடாளுமன்றம் குறித்து மக்கள் பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.

கல்விகற்ற மிகவும் புத்திசாலித்தனமானவர்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என எண்ணினர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினர். எனினும் மக்கள் எதிர்பார்த்தது போல் புத்திசாலிகள் நாடாளுமன்றத்தில் இல்லை.

எனது 17 ஆண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் மோசமான நாடாளுமன்றம் இது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *