சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன் பின்னர் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டன.இந்த வரிசையில் இலங்கையில் தற்போது புதிய திரிபு கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதாகவும், இதற்கு அதிகமான இளைஞர்கள் சிக்கியிருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.