நாட்டில் அரிசிஸ், கோதுமை ,பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் நிதியமைச்சருடன் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
தற்போது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.