எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
ஆயுத போராட்டத்தின் ஊடாகதான் பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அந்த வகையில் எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம்.
துரதிஸ்டவசமாக அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் என சொல்லப்பட்டவர்கள் அதனை சரியாக முன்னெடுக்கவில்லை.
நாங்கள் இப்போது அந்த ஆயுத போராட்டத்தை கைவிட்டு, தேசிய நல்லிணக்கம் என்ற ஆயுதத்தினை இன்று முன்னெடுத்திருக்கின்றோம்.
அந்த தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்கள் மாத்திரமல்ல, வடக்கு மகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து தருவோம்.
முன்னர் பிரபாகரனுடன் பேசுமாறு இங்குள்ளவர்கள் கேட்ட இடத்தில், முதலில் சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறியிருந்தேன். அதன் பின்னர் நான் கதைக்க தயாராக இருக்கின்றேன் என்றேன். ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல எல்லாம் முடிந்தது என்றார்.