அமெரிக்காவில் கூத்தாடிகளின் கொட்டகைக்குள் புகுந்த ஆட்டுதோல் போர்த்த ஓனாய்கள்

அமெரிக்காவில் கூத்தாடிகளின் கொட்டகைக்குள் புகுந்த ஆட்டுதோல் போர்த்த ஓனாய்கள்

கடந்தவாரம் ஆறாம் திகதி அமெரிக்க தலைநகரில் கொங்க்றஸ் சபை கூடியவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் தடுப்பை மீறி கட்டிடத்தினுள் சென்றார்கள். அதன் காரணமாக கூட்டம் இடை  நிறுத்தப்பட்டு நிலமை மோசமாக மறியது என்பதே உலகத்திலுள்ள அதிகமான ஊடகங்க்களின் முதன்மைச் செய்தியாக அமைந்தது. ஆனாலும் கழுகுக்கண் பார்வை கொண்ட  ஒரு சில ஊடகங்களின் கண்களிலிருந்து “ஆட்டுத்தோலில் வந்த நரிகள்” தப்பவில்லை.

ட்றம்பின் ஆதரவாளர்களை பயங்கரவாதிகள், குழப்பவாதிகள், கலகக்காரர் என்றெல்லாம் ஒத்தூதும் ஊடகங்களும், வெட்டி ஒட்டும் (cut and paste) ஊடகங்களும், கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்களும், குற்றம் சுமத்தினர். பல தமிழ் ஊடகங்களும் தம் நிலை மறந்து ஆதரவாளர்களை கலகக்காரர், பயங்கரவாதிகள் என்றெல்லாம், சிலர் தெரிந்தும், சிலர் தெரியாமலும், சித்தரித்தனர். அடிமையாக வாழ்வதை விட மானத்தோடு சாவது மேல் என ஆயுதம் ஏந்தியவர்களையும், பொறுமையோடு காகிதம் ஏந்தியவர்களையும் கலகக்காரர் என்றும், இனவிரோதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் இதே ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

ஆரம்பம் முதல் முடிவுவரை இந்த நிகழ்வை நான் அவதானித்துக்கொண்டு இருந்தேன். ஆரம்பத்திலிருந்தே தடுப்புக்கள் அதிகம் இருக்கவில்லை, மிக இலகுவாக கட்டிட வாசல் வரை அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் நின்ற ஒருசிலர் அந்திப்பாக்கள் என்பதை நானும் அவதானிக்கத் தவறவில்லை, இன்று சில ஊடகங்கள் தாம் பதிவு செய்த வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றனர். 

அந்த வீடியோக்களில் பல அந்திப்பா இயக்கத்தை சேர்ந்த பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் ஊக்கத்தோடு அவர்களுக்கு வழி விடுவதையும் காணக் கூடியதாய் இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்லப்போனால் திட்டமிடப்பட்ட ஒரு சதி நாடகம் மேடை ஏற்றப்பட்டுள்ளது. குட்டையை குளப்பி மீன் பிடித்திருக்கின்றார்கள்.  யார் இந்த அந்திப்பாக்கள் Antifa (anti-fascist) என்பதை மிகச் சுருக்கமாகப் பார்த்தால் இவர்கள் இடதுசாரிகள் சார்பானவர்கள் – “வெள்ளையர்கள் பெரியோர்” (white supremacy) என்ற எண்ணத்திற்கு எதிரானவர்கள் –  இனவாதத்திற்கு எதிரானவர்கள் (anti-racist) – முலாழித்துவத்திற்கு எதிரானவர்கள் (anti-capitalist) அத்தோடு கொம்யூனிசம் (communism), மார்க்சிசம் (marxism), சோசலிசம் (socialism)- போன்ற சித்தாந்தங்களுக்கு ஆதரவானவர்கள், இவர்கள் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் தளமாகக் கொண்டு சிறு சிறு கூட்டமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். 

இவர்களுடைய சின்னம் இரட்டைக் கொடிகளாகும். சைனா வைரஸ்  கோவிட்-19 வரும் முன்பே மாஸ்க் அணிந்து, முற்றும் முளுதுமாக கறுப்பு உடைகளினால் தங்களை மூடி மறைத்து அகிம்சை வழியிலும் வன்முறை வழியிலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இவர்களே. இடதுசாரிக் கொள்கை கொண்ட ஜனனாயகக் கட்சி இந்த அந்திப்பாக்கள் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி தங்கள் காரியத்தை திட்டமிட்டபடியே நடத்தி முடித்துள்ளனர் என்பதே கற்றோரின் கருத்தாகவுள்ளது.  இந்த நரக தந்திரங்களை இலங்கை அரசாங்கத்திடம் இருந்துதான் கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *