அமெரிக்காவில் தோன்றவிருக்கும் மூன்றாம் கட்சி

அமெரிக்காவில் தோன்றவிருக்கும் மூன்றாம் கட்சி

ஐக்கிய அமெரிக்காவில் நூற்றாண்டு காலமாக ஜனனாயகக் கட்சியும் (Democratic Party ) குடியரசுக் கட்சியும்( Republic Party ) மட்டுமே ஆட்சி அமைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஏற்பட்ட  அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய கட்சி ஆரம்பமாகும் என பல அரசியல்வாதிகளும், அரசியல் அறிஞ்யர்களும் ஆருடம் தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் அவர்கள் சத்தியப் பிரமாணமும் செய்துவிட்டார்.

ஆனால் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் அவரைச் சுற்றி அரசியல்வாதிகளும், அரச உத்தியோகஸ்தர்களும், பாதுகாப்புப் பிரிவினருமே நின்றிருந்தனர், ஆனால் டொனால்ட் ட்றம்ப் அவர்கள் தனது இறுதிப் பேச்சை நிகழ்த்தி விடைபெற்று புளொறிடாவுக்கு சென்றபோது செங்கம்பளம் விரித்து வீதி வீதியாக மக்கள் கரகோசம் செய்து நன்றி தெரிவித்து வழியனுப்பினர். நடந்து முடிந்த தேர்தலில் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ட்றம்ப் அவர்கள் தன் மக்களுக்கே முனுரிமை அளித்து பல சாதனைகளை நிகழ்த்தினார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எதிர்க்கட்சியாகிய ஜனனாயகக் கட்சி மட்டுமல்லாது தனது கட்ச்சியிலுள்ளவர்களே அவருக்கு எதிராக சதி செய்ததை யாவரும் அறிவர்.  மூன்றாம் மட்ட உலக அரசியல்வாதிகளைவிட  கேவலனமான சுயநல சந்தர்ப்பவாத, அரசியல் வியாபாரிகள்  இவர்கள் என நன்கு புரிந்துகொண்ட ட்றம்ப் அவர்கள், குடியரசுக்கட்சியின் எதிர்கால வீழ்ச்சியையும் உணர்ந்து புதிய கட்சி ஆரம்பிப்பதே சிறந்த முடிவு என கடந்த வாரம் தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசியிருக்கின்றார். அந்தக் கட்சிக்கு தேசப்பற்றுக் கட்சி ( Patriot Party ) எனப் பெயர் சூட்டப்படலாம் என பலர் சந்தேகிக்கின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *