அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், இவ்வாறான மரணதண்டனைகள் அடுத்த மாதம் 24ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.