அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு தடைவிதித்தார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு தடைவிதித்தார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லாஅலிகமேனி தடை விதித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள ஆன்மீக தலைவரின் உரையில் இந்த தடை வெளியாகியுள்ளது.உலகின் இரண்டு மேற்குலகநாடுகளிலும் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருப்பதன் காரணமாக இந்த மருந்துகளில் தனக்கு நம்பிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா  உண்மையிலேயே மருந்தொன்றினை உருவாக்கியிருக்கும் என்றால் அவர்களின் நாட்டில் இவ்வளவு இழப்புகள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நாளாந்தம் 4000 பேர் உயிரிழக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களால் மருந்தினை உருவாக்க முடியும் என்றால் அவர்களின் பைசர் நிறுவனத்தினால் மருந்தினை உற்பத்தி செய்ய முடியுமென்றால் அவர்களே அதனை பயன்படுத்தலாமே ஏன் அவர்கள் அதனை எங்களிற்கு தரவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் குறித்தும் அதேகருத்தினை வெளியிட்டுள்ள அவர் தான் அமெரிக்காவையும் பிரிட்டனையும் நம்பவில்லை அவர்கள் தங்கள் மருந்துகளை வேறு நாடுகளில் சோதனையிட முயலக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆன்மீக தலைவரின் உத்தரவு காரணமாக பைசர்பயோன்டெக் நிறுவனங்னகளின் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஈரானின் செம்பிறை சங்கம் கைவிட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *