அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர்.
இதையடுத்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்தது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ட்ரம்ப் தடை விதித்தார்.
ஜூன் 22ஆம் திகதி மேலும் சில விசா கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்பின் விசா தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் எச்-1 பி விசாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். விசா தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மெரிக்காவில் எச்-1 பி விசாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். விசா தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எச்-1பி விசாவில் பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் பலர் கொரோனா நெருக்கடியால் வேலைகளை இழந்தனர். அங்குள்ள சட்டத்தின் படி வேலை இழந்ததும் வெளிநாட்டு நபர் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர வேண்டும்.இல்லையென்றால் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும்.
இந்த நிலையில் விசா மீதான தடையை மார்ச் 31ஆம் திகதி வரை மேலும் நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, விசா தடை விதித்ததற்கான காரணங்கள் மாறாததால் தடை நீட்டிக்கப்படுகிறது” என்றார்.