அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து மர்மக்கும்பல் ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து மர்மக்கும்பல் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இனம் தெரியாத சட்ட விரோதக் கும்பல் ஒன்றினாலேயே ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணைத் தாக்குதல்களினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள்,கார்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈராக்கின் இராணுவ உறுப்பினர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஏவுகணைகளில் ஒன்று, ஏவுகணை திசை திருப்பும் ஆயுதத்தின் உதவியுடன் திசை திருப்பப்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு அமெரிக்க அரசாங்கம் தனது பலத்த கண்டனங்களை வெளியிட்டுள்ள அதேவேளை தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஈராக் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும், குறித்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஈராக் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை குறித்த வீரர் மீண்டு வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *