20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளதாக அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார். ஒசாமா பின் லேடனின் மறைவைத் தொடர்ந்து அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்பேற்ற ஜவாஹிரி 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும் உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பேசும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் இரட்டை கோபுரத் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று ஜவாஹிரி எழுதிய 852 பக்க புத்தகம் Telegram செயலியில் வெளியானது. அதைத் தொடர்ந்து முழு உடல் நலத்துடன் ஜவாஹிரி பேசிய ஒரு மணி நேர வீடியோ வெளியானது. ஜெருசலேம் என்றும் யூத மயமாகது என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் பேசிய ஜவாஹிரி அல் கொய்தா அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.