தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க கப்பலை சீன போர்க்கப்பல்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா பல ஆண்டுகளாக தன்னுடையதென சொந்தம் கொண்டாடி வருகிறது.
ஆனால் அந்த தீவு கூட்டங்களை ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் தமக்குரியவை என சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக தீவு உரிமையில் மற்ற நாடுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது அமெரிக்கா.
இதனால் அடிக்கடி அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீன தீவு கூட்டங்களிடையே போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் அண்மையில் சீனாவின் நான்ஷா தீவுக்கு அருகே போர் பயிற்சியில் ஈடுபட்ட யு.எஸ்.எஸ் ஜோன் மெக்கெய்ன் என்ற போர்க்கப்பலை சீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியதாக சீனா தெரிவித்துள்ளது.
எனினும் இதற்கு அமெரிக்க தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.