கொவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பொருட்டு நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச ஊழியர்கள் 10 நாட்கள் மாத்திரமே பணி செய்ய வேண்டும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சின் அதிகாரி ஒருவர்,கொவிட்டுக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கமைய மே மாதத்தில் 18 நாட்களே பணியாற்ற வேண்டும்.எனினும் ஒரு ஊழியர் மே மாத்தினுள் 10 நாட்கள் மாத்திரம் பணிக்கு வர வேண்டும் எனவும் ஏனைய நாட்களை சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறைகளில் பணிக்கு அறிவிக்கலாம்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் போது நிறுவனங்களின் பிரதானிகளின் அவசியத்திற்கமைய அழைக்க வேண்டும்.நிறுவனத்தின் பிரதானிக்கு அவசியம் என்றால் ஒரே ஊழியரை வாரத்திற்கு 5 நாட்களும் அழைக்க முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.