அரச தலைவருக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை

அரச தலைவருக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்திற்கு அமைய அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனக்கே உள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், அரச தலைவருக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.மேலும் அமைச்சர் என்ற வகையில் சரியானதை செய்ய முடியாது என்றால், வேறு வேலையை பார்ப்பேன் என தெளிவாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அதிகாரி யார் என்பதை தீர்மானித்து நியமனக் கடித்தில் கையெழுத்திட்டு நானே வழங்கினேன்.

அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்ட போது, சில விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. சில தெரிவுகள் தற்காலிகமாக முன்வைக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த போது, அவை சம்பந்தமாக விடயங்களை முன்வைத்து, தகுதியான அதிகாரியை தெரிவு செய்யும் போது, சில குறைகள் இருக்குமாயின் அவை குறித்து விரிவாக கலந்துரையாடப்படும்.நான் அரச தலைவருடனும் கலந்துரையாடினேன். அதன் போது ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய அனைத்து தகுதிகளையும் கொண்டவரை நியமிக்க தீர்மானித்தோம். அந்த துறை சம்பந்தமான சில தகுதிகள் உள்ளன.

இதன்படி, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் அமைச்சரின் இணக்கத்திற்கு அமைய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வழங்கும் உத்தரவை நடைமுறைப்படுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்பது சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.சில முரண்பாடுகள் இருந்ததால், அதனை நான் நிறுத்தினேன் எனவும் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *