அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மெல்போர்ன் நகரில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.சனிக்கிழமையன்று பல ஆயிரம் பேர் மெல்போர்னில் புதிய தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக திரண்டனர்
தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியது சர்வாதிகாரம், என்று விக்டோரியா மாகாண அரசுக்கு போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்து, கோசங்களை எழுப்பினர்.மேலும் தடுப்பூசி போடாதவர்களை உணவருந்துதல் மற்றும் விழாக்கள் போன்ற நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸை ஹிட்லர் மீசையுடன் #DictatorDan என்ற ஹேஷ்டேக்குடன் சித்தரிக்கும் பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 83% பேர் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. விக்டோரியாவில் சனிக்கிழமையன்று 1,221 புதிய நோய்த்தொற்றுகளும் நான்கு இறப்புகளும் நியூ சவுத் வேல்ஸில் 250 தினசரி வழக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.