கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவும் தயாரித்து பயன்படுத்தி வருகிறது.ஒருவருக்கு இந்த தடுப்பூசி, 2 டோஸ்கள் போடவேண்டிய நிலையில், இதன் 3-வது டோஸ் மூலம் என்னவித மாற்றங்கள் நிகழும்? என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. இதில் ஆச்சரியமான முடிவுகள் கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பாக 3-வது டோஸ் ேபாடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வலிமையாகி இருப்பதுடன், கொரோனாவின் எத்தகையை மாறுபாட்டையும் எதிர்கொள்ளும் வலிமை பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தவிர ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் இந்த தடுப்பூசியை ஒரு நோயெதிர்ப்பு உந்து சக்திக்கான ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புதிய வைரஸ் திரிபுகளை எதிர்கொள்ள பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.தடுப்பூசியின் 3-வது டோஸ் மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என பலரும் நம்பி வந்த நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் சற்றே ஆச்சரியமளிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.