ஆசிரிய சங்கங்களின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமா னதாக இருந்தாலும், கொரோனா வைரஸினால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் நாட்டில் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.