குடியியல்சார் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்த்து, இராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதை நோக்கமாக கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை இந்த தடை நீடிக்கும் என ஆபிரிக்க ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை உள்நாட்டுப் போரை தடுக்க இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக சூடானின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.