ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டில், சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொற்றால் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நாடு, ஆப்பிரிக்க யூனியனிடம் இருந்து 1 லட்சத்து 2 ஆயிரம் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி பெற்றது. அவற்றில் 80 சதவீதம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளன.
இப்படி காலாவதியான கொரோனா தடுப்பூசிகளை பகிரங்கமாக தீயிட்டு எரித்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெயரை மலாவி பெறுகிறது. காலாவதியான தடுப்பூசிகளை அழிக்க வேண்டாம் என்று முதலில் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது. இப்போது அது தனது முந்தையை அறிவுரையை மாற்றிக்கொண்டு விட்டது என தகவல்கள் கூறுகின்றன. எரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் காலாவதி தேதி ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டிருந்தாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. தடுப்பூசிகள் எரிக்கப்பட்டது குறித்து அந்த நாட்டின் சுகாதார மந்திரி டாக்டர் சார்லஸ் மவன்சம்போ கூறுகையில்,
“எங்களிடம் காலாவதியான தடுப்பூசிகள் இருப்பதாக தகவல்கள் பரவியபோது, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் யாரும் வரவில்லை என்பதை கவனித்தோம். நாங்கள் அவற்றை எரித்து அழிக்காவிட்டால், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்துகிறோம் என்று மக்கள் நினைப்பார்கள். அவர்கள் தடுப்பூசி போடவரவில்லை என்றால் கொரோனா வைரஸ் தாக்கும்” என குறிப்பிட்டார்.