ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது.திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு கோரி கடந்த 9ஆம் திகதி மாத்தறை கொட்டபொல தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கலந்து கொண்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட தெனியாய கன்னங்கர ஆரம்ப பாடசாலையின் ஆசிரியரான வருணி கன்னங்கர அசங்கா என்ற 27 வயதுடையவரே உயிரிழந்தார். தெனியாய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்க முன்னரே அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.