ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை தாக்க வெடிமருந்துகளுடன் வந்த வாகனம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்க இராணுவப் படைகள் இன்று காபூலில் ஒரு வாகனத்தின் மீது ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தின. “பொதுமக்களின் உயிரிழப்புக்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுகிறோம், இந்த நேரத்தில் எங்களுக்கு எந்த மாற்றுவழியும் இல்லை. எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளநாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
தீவிரவாதக் குழுவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இரண்டாவது வான்வழித் தாக்குதல் இதுவாகும். கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் உட்பட170 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.