ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் – பரபரப்பாகும்  அரசியல்

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் – பரபரப்பாகும் அரசியல்

சமகால அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விமர்சித்து வரும் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa ) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் இருந்து கொண்டு அதற்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் கருத்துக்களை முன்வைக்காமல் வெளியில் சென்று பேசுவது தவறு என நாமல் கூறியுள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் செயற்பாட்டிற்கு எதிராக மூன்று அமைச்சர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் கேட்கப்பட்ட போதே நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara ), விமல் வீரவன்ச, (Wimal Weerawansa ) உதய கம்மன்பில (Udaya Gammanpila ) ஆகியோரே யுகதனவி மின் உற்பத்தி செயற்பாட்டுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமைச்சர்களே விமர்ச்சிக்கும் நிலைமை காரணமாக உள்ளக முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன்காரணமாக விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *