இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொடர்பில் வெளிவந்த அபாய அறிவிப்பு

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொடர்பில் வெளிவந்த அபாய அறிவிப்பு

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை இன்று 336 ஆக உயர்ந்தது.

இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், வெளிநாடு செல்லாத பிரிட்டன் மக்களுக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிவேகத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 350 இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 10 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும் சஜித் தெரிவித்துள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *