இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.2020- 2021 சீசனுக்கான ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்ட் சிட்டி அணிகளுக்கு இடையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது.35-வது போட்டியில் மான்செஸ்டர் சிட்டி செல்சியிடம் 1-2 எனத் தோல்வியடைந்தது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 35 போட்டிகளில் 25 வெற்றி, 5 தோல்வி, 5 டிரா மூலம் 80 புள்ளிகள் பெற்றிருந்தது.
மான்செஸ்டர் யுனைடெட் 34 போட்டிகளில் 20 வெற்றி, 10 டிரா, 5 தோல்விகள் மூலம் 70 புள்ளிகள் பெற்றிருந்தது, நேற்று 35-வது போட்டியில் லெய்செஸ்டர் அணியை எதிர்கொண்டது. இதில் 1-2 என மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது.இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 35 போட்டிகளில் முடிவில் 70 புள்ளிகளும், மான்செஸ்டர் சிட்டி 80 புள்ளிகளும் பெற்றுள்ளன. இனிமேல் நடைபெறும் மூன்று போட்டிகளிலும் மான்செஸ்டர் சிட்டி தோல்வியடைந்தாலும், மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றாலும் மான்செஸ்டர் சிட்டிதான் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும்.இதனால் மான்செஸ்ட் சிட்டி இங்கிலீஷ் பிரிமீயர் லீக் 2020-2021-க்கான சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.