இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டுக்கான பிளாக்ஷிப் எஸ் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது கேலக்ஸி ஏஷ எப் மற்றும் எம் சீரிஸ் மாடல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் கேலக்ஸி எம்42 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இதில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் பேண்ட் வைபை சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
5ஜி வழங்கப்படும் பட்சத்தில் கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி 5ஜி, சியோமி எம்ஐ 10ஐ மற்றும் ரியல்மி எக்ஸ்7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *