இணைய பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவு – ஜோ பைடன் பிறப்பித்தார்

இணைய பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவு – ஜோ பைடன் பிறப்பித்தார்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால் மிகப்பெரிய குழாய்வழி எரிபொருள் வினியோகத்தை நிறுத்த வேண்டிய நெருக்கடி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் எரிபொருள் வினியோகம் தடைபட்டு, விலை உயர்வுக்கு வழிவகுத்தது. பல மாநிலங்கள் அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியதாயிற்று.இந்த நிலையில் இணையவழி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று (நேற்று) ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், கூட்டாட்சி அரசாங்க அமைப்புகளை பாதுகாப்பதற்கும் வகை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்து போட்டார். சமீபத்தில் சோலார் விண்ட்ஸ், மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச், காலனியல் பைப்லைன் போன்றவற்றில் இணைய பாதுகாப்பு அத்துமீறல்களால் நடந்த சம்பவங்கள், அமெரிக்காவின் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மீது இணையவழி தாக்குதல் குற்றங்களை நாடு எதிர்கொள்வதை நினைவூட்டுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பதின்முலம், இணைய பாதுகாப்பு சடடங்களை நவீனமயமாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த நிர்வாக உத்தரவு செய்யும்” என கூறப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *