இத்தாலியில் வெடித்தது அமெரிக்கக் குண்டு

இத்தாலியில் வெடித்தது அமெரிக்கக் குண்டு

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் திட்டமிடப்பட்ட குளறுபடிகள், சட்ட மீறல்கள், வாக்குத் திருட்டுக்கள், களவுகள் நடந்தன என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) அவர்களின் குற்றச்சாட்டுமட்டுமன்றி, தற்போதைய உலகத்தின் போக்கையும் “ஒற்றை உலக ஆட்சியையும்”(one world government) பற்றி அறிந்த அநேகரினது குற்றச்சாட்டுமாய் இருந்தது. இவை பற்றி நூற்றுக் கணக்கான வழக்குத் தாக்கல்கள் பல நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட போதிலும் ஆதாரம் அற்றவை எனத் தட்டிக் கழிக்கப்பட்டு நாளைய தினம் திரு ஜோ பைடன் (Joe Biden) அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் இத்தருணத்தில்   இத்தாலி நாட்டில் வெடித்தது சதிகாரரின் சதிக் குண்டு.

இத்தாலி நாட்டின் மிகவும் பிரபல்யமான, அதி உயர் நீதிமன்ற (Supreme Court) சட்ட வல்லுனர் அல்பியோ  ட  உர்சோ (Alfio D’Urso) அவர்கள், இத்தாலியில் உள்ள கணணி மென்பொருள் உற்பத்தி ஸ்தாபனமாகிய லியனாடோ ஸ்பா (Leonardo SpA) வின் முன்னாள் தலைமை அதிகாரி  ஆற்றுறொ ட எலியா (Arturo D;Elia ) என்பவர் இத்தாலியில் அமைந்துள்ள அமெரிக்க  வெளினாட்டுத் தூதராலயத்தின் தூண்டுதலில் இராணுவ சட்டலைற் (satellite) மூலமாக ஆறு முக்கிய மானிலங்களில் வாக்கு எண்ணிக்கைகளை மாற்றியும் திருடியும் டொனால்ட் ட்றம்ப் அவர்களைத் தோற்கடித்து ஜோ பைடன் அவர்களை வெற்றிபெற வைத்துள்ளனர்.

இத்தாலி நாட்டு உளவுப் பிரிவினர் இத்தாலியிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில், வெளினாட்டுச் சேவைகள் பிரிவில் 20 வருடங்கள் கடமை புரிந்த ஸ்டீபன் செறபின் (Stephan Serafin) என்பவர் பாதுகாப்பு ஒப்பந்த ஸ்தாபனமாகிய  “லியனாடோ  ஸ்பா” (Leonardo  SpA) வின் முக்கிய அதிகாரி ஜெனறல் கிறசியானோ (Gen. Graziano) அவர்களின் மூலமாக இராணுவ சட்டலைட்டின் வழியாக இந்த தேர்தல் திருட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். மேலும் இந்தச் சதித் திட்டம் முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் குசெய்ன் ஒபாமா (Barack Husein Obama) அவர்களும் இத்தாலியின் முன்னைநாள் பிரதம மந்திரி றென்சி (Renzi) யும் இணைந்து இச்சதிக்கு தலைமைதாங்கியதாக கூறப்படுகின்றது.

“லியனாடோ  ஸ்பா” (Leonardo  SpA) ஸ்தாபனத்தை சேர்ந்த, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர், பிரபல வழக்கறிஞர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து இத்தாலியின் அதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது பெய்துகொண்டிருக்கும் அரசியல் அடை மழை நாளையோடு ஓயப்போவதில்லை என்பதே நிச்சயம்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *