இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்த மியான்மர் பொலிஸார்

இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்த மியான்மர் பொலிஸார்

மியான்மரிலிருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 பொலிஸாரை அந்த மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிற்கு அண்டை நாடான மியான்மரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50இற்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 பொலிஸாரை அந்த மாநில பொலிஸார் நேற்று பிடித்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் சிக்கினர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, மியான்மர் இராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை இராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இராணுவத்துக்கு பயந்து மியான்மர் பொலிஸார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *