உலகம் முழுவதும் சுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மரபனு மாற்றம் அடைந்து உருமாறியது கண்டறியப்பட்டது. முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.அதே போல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது.இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்து நாட்டில் பரவி உள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சுவிட்சர்லாந்தின் பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் கூறும்போது, சுவிட்சர்லாந்தில் ஒருவர் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்தியாவின் உருமாறிய வைரஸ் சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு இருந்துள்ளது. அவரது ரத்த மாதிரிகளை கடந்த மாதம் சேகரித்து ஆய்வு செய்ததில் அவருக்கு இந்தியாவின் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அதுபோன்று சுவிட்சர்லாந்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது