6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை.அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது” என கூறினார்.