இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. கடைசி 2 டெஸ்டும், 20 ஓவர் போட்டிகளும் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளும் மராட்டிய மாநிலமபுனேயில் நடத்தப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி புனேயில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது.
இந்திய அணி இந்த தொடரில் கடைசி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் கடைசியாக 2019 உலக கோப்பையில் மோதின. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 20 ஓவர் தொடரில் 5 ஆட்டத்தில் 231 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரை சதம் அடங்கும். அதிக பட்சமாக 80 ரன் குவித்தார்