இந்திய அணியில் ஜடேஜாவுக்கு இடம் இல்லையாம்…

இந்திய அணியில் ஜடேஜாவுக்கு இடம் இல்லையாம்…

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி இரு அணிகளுக்குமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்பட்டது. இந்த போட்டியின் நான்காம் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கி இருந்ததால், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா முன்னாள் இந்திய வீரர்களே உறுதியாக கூறினர்.

ஆனால், கடைசி நாளில் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்தநிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 25ம் தேதி இங்கிலாந்தின் லீட்ஸில் துவங்க உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இருவருமே தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இருவரையும் மாற்றும் முடிவை இந்திய நிர்வாகம் எடுக்காது என்றே தெரிறது.

இதனால் ப்ரித்வி ஷாவிற்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது. மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் புஜாரா மற்றும் ரஹானேவிற்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடியதால் இருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

இதனால் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலுமே ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்காததால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கே இந்திய அணி வாய்ப்பு கொடுக்கும் என தெரிகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் வழக்கம் போல் முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஷர்துல் தாகூர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டால் இஷாந்த் சர்மாவின் இடம் மீண்டும் பரிபோகும்.

அணியின் பட்டியல்:

கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா/ ஜடேஜா/ ஷர்துல் தாகூ  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *