இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜய எயர் ஜெட் புறப்பட்டசில நிமிடங்களில் ராடரிலிருந்து காணாமல்போயுள்ளது.இந்நிலையிலேயே விமானம் கடலில் விழுந்த பகுதியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கப்பல்களையும் கடற்படையினரின் சுழியோடிகளையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட பொருட்கள் விமானங்களின் சிதைவுகளாக என விசாரணையாளர்கள் ஆராய்;ந்துவருகின்றனர்.ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டஸ்ரீவிஜய விமானம் புறப்பட்டு நான்கு நிமிடங்களில் காணாமல்போயுள்ளது.
வெடிப்புச்சத்தமொன்றை கேட்டதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானம்மின்னல்போல கடலில் விழுந்து வெடித்தது என சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
விமானம் எங்கள்கப்பலிற்கு மிக அருகில் விழுந்தது அதன் ஒரு பாகம் கிட்டத்தட்ட எங்கள் கப்பலின் மீது விழுந்தது நாங்கள் உடனடியாக கரைக்கு திரும்பினோம் என அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் முதலில் குண்டுவெடிப்பு அல்லது சுனாமி என நினைத்தோம் அதன் பின்னர் கடலில் பெரும் வெடிப்பிற்கு பெரும் தண்ணீர் தெறித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம்காணாமல்போன தீவிற்கு அருகில் வசிக்கும் பலர் கடலில் பொருட்கள் மிதப்பதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் ஏழு சிறுவர்கள் மூன்று குழந்தைகள் உட்பட 62 பேர் பயணித்தனர் என தெரிவித்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள் பொயிங்விமானத்தில் 130 பேர் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்
விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமானநிலையங்களில் தகவல்களிற்காக காத்திருக்கின்றனர்இ
எனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் விமானத்தில் பயணம் செய்தார்கள் என ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.