இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நிகழ்வு!

இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வலையத்திற்குள் நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நிலைமைகள் சுமூகமில்லாத விடத்து மாற்று வழியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று ஏற்கனவே பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்புக்கிணங்க பிரத்தியேகமானதொரு இடத்தில் இரகசியமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *