தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் கொழும்பில் சில அரசியல் பிரிவினரால் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையானது சட்டவிரோதமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போராட்டங்கள் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அதிக இறப்புகளுக்கு மாத்திரமே வழிவகுக்கும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களின் சுகாதார பாதுகாப்பை மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள்.
கொழும்பை முற்றுகையிடுவதன் விளைவாக அவர்கள் எதனை சாதிக்க போகிறார்கள்.
கொவிட்-−19 வைரஸ் தாக்கத்தினை தீவிரப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.