அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சையில் இராணுவத்தை இழுப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை ஆபத்தான, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்லும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைதியான முறையில் அதிகாரப்பகிர்வு நடந்தேற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள், ஜனாதிபதி ட்ரம்ப் மக்களின் முடிவை கண்டிப்பாக ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.