இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் நகரும் அரசாங்கம்!

இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் நகரும் அரசாங்கம்!

சந்தர்பவாத அரசியல் கலசாரத்தை நோக்கியும், இராணுவ ஆட்சியின் ஆரம்பத்தை நோக்கியும் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீளக் கட்டியொழுப்பும் பெறுப்பு எமக்குள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.“வியத்மக” பற்றிப் பேசுகிறார்கள், மக்களுக்களுக்கு பயனற்ற பல வர்த்தமானிகளை நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் வெளியிட்ட வன்னமுள்ளனர் எனவும் பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குள் அரசாங்கத்தாலேயே அதே வர்த்தமானி மாற்றப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,கொள்கையும், தெளிவான பார்வைகளுமின்றி பிரச்சிணைகள் வந்தால் உடனடித் தீர்வாக சந்தர்ப்பவாத முடிவுகளை இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் எடுத்தவன்னமுள்ளது. நிலைபேறான பார்வைகள் இன்மையை இத்தகைய பல வர்த்தமானிகள் புலப்படுத்துகிறன

ஓரிரு நாட்களில் ஏற்படவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரை காலமும் நாடு கடந்த வந்த பாதையை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.எமது நாட்டைவிட பின்னோங்கியிருந்த மலேஷியா, சிங்கப்பூர் மட்டுமன்றி இன்று கொரியா,வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் எம்மை விட முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இன்று எமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களாதேஷிடம் நிதி உதவி கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது பங்களாதேஷின் பொருளாதார அபிவிருத்தியை தான். ஏன் எமது நாடு அபிவிருத்தியடையாமல் போனது? உள் நாட்டுப் பிரச்சினைகளை குறைக்க முடியாததன் விளைவுகளைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது. கட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்து விட்டு நாட்டின் முன்னோற்றம் பற்றி முற்போக்க சிந்திக்க அனைவரும் முன்வர வேண்டும். இல்லை என்றால் நாடு தொடர்ந்தும் பின்னோக்கிய நகர்வுகளுக்கே செல்லும்.இன்று ஆளும் கட்சியிலுள்ள விமல் வீரவன்ஸ ஒரு பக்கமாகியிக்கிறார். அரசாங்கத்தை அமைக்க உதவிய சமூகக் கொள்கை கொண்ட வாசுதேவ நாணாயக்கார போன்றவர்கள் ஒரு பக்கமாகியுள்ளார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத பஷில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களை வழி நடத்துகிறார்.

அதற்குரிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய ஜனநாயக விரோத போக்குகள் இராணுவ ஆட்சியை நோக்கிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது.ஐக்கிய மக்கள் சக்தியை நம்பிக்கையாகப் பாருங்கள். உள்ளக ஜனநாயகமுள்ள கட்சி. வருடாந்தம் கட்சியின் தலைவரை தெரிவு செய்யும் முறைமை யாப்பிலுள்ளது. எமது கட்சியின் யாப்பை வாசித்துப் பார்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.உடனடித் தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியாக ஒன்றித்து புத்தாண்டுடன் தேசத்தைக் கட்டியொழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *