இராமர் பாலத்திற்கும் சீனத்தூதுவர் விஜயம்! இந்தியாவிற்கு எச்சரிக்கையா?

இராமர் பாலத்திற்கும் சீனத்தூதுவர் விஜயம்! இந்தியாவிற்கு எச்சரிக்கையா?

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வடகிற்கு சென்றுள்ள சீன தூதுவர் கீ சென்ஹொங் பல இடங்களை சென்று பார்வையிட்டுள்ள நிலையில், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தையும் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வடமாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டு சென்று அவர் பார்வையிட்டுள்ளார். இந்த பயணத்தில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இணைந்துள்ளனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றின் மூலம் 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிலுள்ள இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டு வரை அவர்கள் பயணித்தனர். மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாட்டில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தின்போது 17 கடல் மைல் தூரம் பயணித்தே சீனதூதுவர் உள்ளிட்ட குழுவினர் அந்த இடத்தை அடைந்தனர். 

இதேவேளை சீனதூதுவரின் வடக்கிற்கான இந்த விஜயத்தை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *