இலங்கைக்கு ஆபத்தா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைக்கு ஆபத்தா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது,

“இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் B.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.இது, B1617 வம்சத்தை சேர்ந்தது. இந்த வைரஸ், E484Q, L452R என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது.இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன்,  பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது.

இதனால் இந்தியாவுக்கு அருகில் உள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தை கொண்டுள்ளது. குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது. இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் கூறினாா்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *