இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதையில் சவாரி செய்த நாமல்

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதையில் சவாரி செய்த நாமல்

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதை கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு குன்றுகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை இன்று (28) விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ(Namal Rajapaksa) மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

3 கிமீ 2 தடங்கள் கொண்ட கொழும்பு டூன்ஸ் பந்தய மைதானம் துறைமுக நகரத்தில் சுமார் 05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

நாட்டின் முதல் ATV டிராக் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கம்பஹா புத்பிட்டிய மாலிகதென்ன பிரதேசத்தில் இந்த பாதை அமைந்துள்ளது. இது கிரானைட் மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட ATV Track Running on the Sand Dunes, நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மணல் பாதையாகும். இவ்வாறான சாகச விளையாட்டுக்கள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வருவதற்கான ஆசையை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *