சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டாலும் அது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு தற்காலிக தீர்வே என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த நிதியில் இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலர்களை சம்பாதிப்பதற்கு தேவையான வளங்கள் இருந்தாலும், ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு காரணமாக அவை தடைப்பட்டுள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
செல்வதை விட இந்தியாவுடம் கடன் பெறுவது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள அவர் அடுத்த மாதமாகும் போது டொலர் 500 ரூபாவுக்கு செல்லும் என கூறினார்.