இலங்கையில் இனி மக்கள் இப்படி இந்தால் மட்டும்தான் வாழமுடியும்!

இலங்கையில் இனி மக்கள் இப்படி இந்தால் மட்டும்தான் வாழமுடியும்!

நாட்டு மக்கள் ஒன்றை கவனமாக புரிந்து கொள்ளவேண்டும் இனியும் பொருட்களுக்கு எப்பவுமே விலை குறையாது இன்னும் விலைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இதனை நாம் எவ்வாறு சமாளிப்பது என்பதைத்தான் சிந்திக்கவேண்டும்.

  • பால்மாக்களை குழந்தைக்கு மட்டும் கொடுங்கள் அல்லது ஒரு வேளை மாத்திரம் குடியுங்கள் 
  • அந்தந்த பருவத்தில் கிடைக்கிற உணவுப்பொருள்களை வாங்குங்கள். அப்படி வாங்கும்போது குறைந்த விலையில் அந்தப் பொருள்கள் கிடைக்கும்
  • நொறுக்குத்தீனி வாங்குவதைத் தவிருங்கள். 
  • உங்கள் வீட்டிலேயே ஒரு காய்கறி தோட்டம் போட முடியுமா என்று யோசியுங்கள்.
  • ஆடம்பர செலவுகளை குறையுங்கள், 
  • கடன் வாங்காமல் வாழ முயற்சி செய்யுங்கள்.
  • கடைகளில் உணவு வாங்குவதை தவிருங்கள். 
  • சரியான நேரத்தில் கட்டணம் செலுத்துதல் (சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்கலாம்)
  • ஒரு மாதத்திற்கு ஆகும் செலவுகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
  • கொஞ்ச பணமாக இருந்தாலும் அதை எழுதி வையுங்கள். அப்போது நீங்கள் எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்பதையும் பணத்தை எங்கே வீணடிக்கிறீர்கள் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். 
  • புதுப்புது பொருள்கள் வாங்கினால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள். “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” 
  • இப்போதே பணத்தைப் பார்த்து செலவு செய்தால், தேவைப்படும்போது அது உங்களுக்குக் கைகொடுக்கும்!
  • புது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். 
  • வாகனத்தை பயன்படுத்தும் போது திட்டமிட்டு செல்லுங்கள் இல்லாவிட்டால் தேவை இல்லாமல் எரிபொருள் வீணாகும். சீரான வேகத்தில் ஓடும் போது எரிபொருளை சேமிக்க முடியும். 
  • கடைக்கு போவதற்கு முன்னால் என்னென்ன பொருள்களை வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியல் தயாரியுங்கள். அப்படிச் செய்யும்போது கண்ணில் படுவதையெல்லாம் வாங்க மாட்டீர்கள்.
  • சமைத்த உணவு மீதி இருந்தால் அதை சூடாக்கி திரும்பவும் பயன்படுத்துங்கள். 
  • வீட்டில் பயன்படுத்துகிற எலெக்ட்ரிக் அல்லது எலெக்ட்ரானிக் சாதனங்களையோ, நாம் பயன்படுத்துகிற வாகனத்தையோ மாற்றிவிட்டு புதிதாக வந்திருக்கிற பொருள்களை வாங்குவதைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப்போட முடியுமா என்று யோசியுங்கள். அல்லது உங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை, நீங்கள் பயன்படுத்தாத பொருள்களை, விற்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். இப்படிச் செய்யும்போது உங்களால் எளிமையாகவும் வாழ முடியும், வருமானமும் உங்கள் கையில் நிற்கும்.
  • மோசமான பழக்கங்களை விடுவதற்கு அதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உதாரணத்துக்கு புகையிலையைப் பயன்படுத்துவது, சூதாடுவது, குடிப்பது போன்ற பழக்கங்களை விடுவதற்கு அது நல்ல வாய்ப்பாக இருக்கும். இப்படிச் செய்யும்போது வருமானமும் உங்கள் கையில் நிற்கும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும். முக்கியமாக குடும்பத்தாரோடு அன்பாக இருக்கங்கள். சின்னச் சின்ன தடங்கல்கள் முதற்கொண்டு, பெரிய பெரிய இடையூறுகள் வரை நம்முன் வந்து வரிசைகட்டி நிற்கும். இதற்கு எதற்கும் அசராமல் ஒவ்வொன்றையும் நிதானமாக எதிர்கொண்டு தாண்டிச் செல்லும் மனநிலை கட்டாயம் வேண்டும்.
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *