எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருமளவில் மக்கள் ஒன்று கூடுவதனால் இரண்டு வாரங்களின் பின்னர் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அனுபவங்களின்படி மக்கள் ஒன்று கூடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இரண்டு வாரங்களின் பின்னர் புதிய அலை உருவாகியுள்ளது.
மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். சுற்றுலா பயணங்கள் செல்வதனால் ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு வாய்புகள் உள்ளது.
தயவு செய்து மக்கள் ஒன்றுக்கூடுவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒரு அலை உருவாகினால் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.