இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள இந்திய கடற்பi அதிகாரி இந்தியா இதன் காரணமாக இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்திய கடற்படையின் துணை தலைவர் வைஸ் அட்மிரல் ஜி அசோக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடல்சார்எல்லைகளை பாதுகாப்பதற்கு இந்திய கடற்படை சிறந்த முறையில் தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள அவர் எங்களிற்கு எவரும் எந்த விதத்திலும் ஆச்சியத்தை அளிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சீன கடற்படை துறைமுக திட்டங்களை பெறுவது ஆபத்தானதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய முயன்றீர்கள் என்றால் அது கடினமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இந்த பிராந்தியத்திற்கு புதியவர் ஒருவர் அதிகளவு ஆர்வத்தை காண்பிக்க தொடங்கினால் அது எங்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதனை உன்னிப்பாக நாங்கள் கண்காணிப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சீன கடற்படை புதிய துறைமுக திட்டங்களை பெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்திய கடற்படை இந்த விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றதா என்ற கேள்விக்கு ஆம் முழு பிராந்தியத்தையும் கண்காணிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் இந்தியாவின் வடபகுதி கடற்பகுதி மூலமாக ஆச்சரியமளித்தது போல தென்பகுதி ஊடாக ஆச்சரியமளிக்க முடியுமா என்ற கேள்விக்கு மும்பாய் ஹோட்டல் தாக்குதலிற்கு பின்னர் கடல்பாதுகாப்பு தொடர்பில் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என இந்திய கடற்படையின் துணை தலைவர் வைஸ் அட்மிரல் ஜி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.கடற்பகுதியில் நாங்கள் ஆச்சரியமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.