இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள்.சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது.இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய ச கல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக ட்டமூலத்தை நிறைவேற்றி. கொண்டது இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்குவரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.சுற்றிவழைத்துக்கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது.

இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது.ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது.திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும்.கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்படவேண்டியிருக்கும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும்.இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூலமுதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்துவிட்டது. கொழும்பு துறைமுக த்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறை மை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது.

இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.  துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுகநகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது.269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன.பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம்,  ,நிதியியல்விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி(Real Estate Development) ஆகியவை நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கபபடுகிறது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

  துறைமுக நகரதிட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகளள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார்.திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியபாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார்.இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.     கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது.ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது. பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப்படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.  ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட டெய்லி ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு விற்பனை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள   இந்த சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறதது.பெய்ஜிங்கிற்கு சாந்தான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகுவாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்படவிருப்பதாக கூறப்படுகிறது.     திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்குநகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ;

கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டுவரப்படவிருப்பவையாகும் என்றும் டெயிலி டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.  முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ்இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்படவிருந்ததாக டெயிலி ரெலிகிராவ் கூறியது.

ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில் போட்டி ஏலச்செயன்முறைகளுக்கு அனுமதி வழங்கப்படக்ககூடும்.ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது.கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயனமுறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து.சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக்கொண்டிருக்கும்.கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும்.இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவுசெய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதேவேளை அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா?உள்நாட்டு அல்லது சீனாவைச்சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். 

முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்றுமுழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலைநிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும்.ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை.சட்டம்,   ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது.ஊழல் தலைவிரித்தாடுகிறது.கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங்கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.  ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம். 

 ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ெகாள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிவரலாம்.   

இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர்தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.   2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகூலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *