இலங்கையில் நீண்ட நாட்களின் பின் 1500 இற்கும் குறைவான கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் 1,262 பேரே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் 3 ஆயிரத்தை அண்மித்த கொவிட் தொற்று தற்போது குறைந்து வருவதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இதுவரை கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர்.
ஆனால் தற்போது கொழும்பில், கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் தன்மை திடீரென குறைவடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் 98 பேர் மாத்திரமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.