இலங்கை குறித்துநடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

இலங்கை குறித்துநடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே எங்களிற்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் ஐக்கியநாடுகளிற்கு வழங்கிய உறுதிமொழியில் காணப்படும் அனைத்தையும் இலங்கை நிறைவேற்றிவிட்டது நீதிபொறி வெளிநாட்டு நீதிபதிகள் ஆகிய விடயங்களை தவிர எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *