இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது – ஜயநாத் கொலம்பகே

இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது – ஜயநாத் கொலம்பகே

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள வாக்களிப்பில் இலங்கை தோல்வியடைந்தாலும் எதுவும் இடம்பெறாது.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற புதிய ஊடக செயற்பாட்டளர்களுக்காக ஒதுக்கப்பட்ட Cyber Conference தொடரில் மனித உரிமைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச நீதிமன்றம் 2019 ஆண்டில் பெரிய பிரித்தானியாவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது டியோ காசி தீவுகளை பிரிட்டன் நிருவகிப்பபது முழுமையாக தவறானது. இதனால் மொரிஷியஸ் நாட்டின் நிருவாகத்திடம் அதனை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியே சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை பெரிய பிரிட்டன் ஏற்றுக்கொண்டதா. இல்லை. இது வெறுமனே ஓர் ஆலோசனை என்றே Advisory opinion பிரிட்டன் தெரிவித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தகவல்களை திரட்டுவதற்காக தனியான குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான சில நாடுகள் இணை அனுசரணையுடன் சமர்ப்பித்துள்ள பிரேரணை கடுமையானதாக சோடித்துக் காட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/01 இணக்கப்பாட்டுக்கு இணை அனுசரணை தெரிவிப்பதற்கு உடன்பட்டதை தொடர்ந்து நாட்டிற்கு எதிரான இணக்கப்பாட்டு விடயத்திற்கு உடன்படுவதற்கு உடன்பாடு ஏற்பட்ட போதிலும் அதில் சில விடயங்கள் எமது நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைய மேற்கொள்ள முடியாது.

இதேபோன்று அதில் உடன்பட்டவை பல இருந்ததாக, கூறப்பட்ட போதிலும் அதன் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 30/01 க்காக பொதுமக்களின் வெறுப்பின் அளவு எப்படி இருந்தது என்பது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மூலம் வெளிப்பட்டது. நாட்டில் முதல் முறையாக சிறுபான்மையின வாக்குகள் இன்றி இத்தேர்தலில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டமை 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 3/2 பெருபான்மையுடன் நாடாளுமன்றத்திற்கு அரச நிருவாகம் தெரிவானமை முக்கியமானதாகும்.

30/01 இணக்கப்பாட்டிற்கு கைச்சாத்திட்டவர்கள் அதாவது 2015 ஆம் ஆண்டில் அப்பொழுது இருந்தவர்கள் இன்று எமது நாடாளுமன்றத்தில் இல்லை.

நாட்டில் உள்ள தேர்தல் முறைக்கு அமைவாக பிரதான கட்சிக்கு ஒரு தேர்தல் தொகுதியிலும் வெற்றிபெற முடியாத நிலை இருந்த போதிலும் 30/01 இணக்கப்பாட்டிற்கு இணை அனுசரணை தெரிவித்தமையினால் கடந்த தேர்தலில் பொதுமக்கள் வெறுப்பை வெளிப்படுத்தி தமது ஜனநாயக அதிகாரத்தை பயன்படுத்தி இவர்கள் அனைவரையும் ஓரங்கட்டியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *